#JUSTIN || திடீரென பற்றி எரிந்த மருத்துவமனை... நோயாளிகளின் கதி? ராம்நாட்டில் பரபரப்பு

x

ராமநாதபுரம் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது தனியார் எலும்பு முறிவு சிகிச்சை மருத்துவமனை. இந்த மருத்துவமனையில் திடீரென ஏசி இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறில் தீ பிடித்ததாக கூறப்படுகிறது இந்த நிலையில் தீ விபத்து ஏற்பட்டவுடன் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது அதனை தொடர்ந்து அங்கு சிகிச்சையில் இருந்த நோயாளிகள் அங்கிருந்து அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர் வெளியேற்றி வேறு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர் ஆம்புலன்ஸ்களில் அனுப்பி வைக்கப்பட்டனர் தனியார் எலும்பு முறிவு சிகிச்சை மருத்துவமனையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் ராமநாதபுரத்தில் பரபரப்பும் பதட்டமும் நிலவி வருகிறது


Next Story

மேலும் செய்திகள்