ஆறுதல் சொல்ல விஜய்யை தேடி ஊர் ஊராக சுற்றி திரியும் சிறுவன்

x

விஜய்யின் பிகில் திரைப்பட ராயப்பன் கதாபாத்திரத்தை சிறுவன் ஒருவர் நிஜத்தில் தேடி அலையும் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது... பிகில் திரைப்படத்தில் விஜய் இரட்டை கதாபாத்திரங்களில் நடித்திருந்த நிலையில், அதில் ராயப்பன் கதாபாத்திரம் உயிரிழந்து விடும் ...

இந்நிலையில் திருச்சியைச் சேர்ந்த 16 வயது சிறுவன் சிறுவயதிலேயே சற்று அறிவுத்திறன் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும், ராயப்பன் உயிரிழந்த காட்சியை பார்த்ததற்கு பிறகு மேலும் பாதிப்புக்குள்ளாகி உயிரிழந்த ராயப்பனை நேரில் பார்ப்பதற்காக ஊர் ஊராக அலைவதாகவும் சிறுவனின் பாட்டி கவலை தெரிவிக்கிறார். மேலும், சென்னைக்கு அடிக்கடி வந்து விஜய்யின் இல்லத்தில் புகைப்படம் மட்டும் எடுத்துக் கொண்டு ஆறுதல் அடைவதாகக் கூறும் அவர் தன் பேரனுடன் அவரை நேரில் சந்திக்க முடியுமா என்ற ஏக்கத்துடன் பேரனுடன் பனையூர் தமிழக வெற்றிக் கழகம் கட்சி அலுவலகத்தின் முன்பு காத்திருந்தார்...


Next Story

மேலும் செய்திகள்