"தமிழ்நாடு Vs குஜராத்...யாரு பெஸ்ட்? - மத்திய அரசின் ரிப்போர்ட்" - திமுக அறிக்கை

x

தமிழ்நாடு எதிலும் முதலிடம் என்பதற்கு மத்திய அரசின் ஆவணங்களே சாட்சி என திமுக அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்தியாவின் எழுச்சிக்கு முதல்வர் ஸ்டாலினின் திராவிட மாடல் தத்துவமே வழிகாட்டி என குறிப்பிட்டு இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது... மகப்பேற்றுக்குபின் கவனிப்பு, கணினி பொருள்கள் ஏற்றுமதி, சிறப்பு பொருளாதார மண்டலங்கள் ஆகிய 7 பிரிவுகளின் ஆய்வுகள் குறித்த அறிக்கைகள் மத்திய அரசு நிறுவனங்களால் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அவை அனைத்திலும் தமிழ்நாடே சிறந்து விளங்குவது தெளிவுபடுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது... உற்பத்தி பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கான ஆயத்த நிலைகள் குறித்த 2022ம் ஆண்டிற்கான நிதி ஆயோக் நிறுவன ஆய்வில், 80 முதல்100 மதிப்பெண்கள் வரை பெற்று தமிழ்நாடே முதலிடம் பெற்றுள்ளது என்றும், இறக்குமதி - ஏற்றுமதி பதிவுகள் குறித்து நிர்யாத் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 16.30 சதவீத பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியாவில் மராட்டிய மாநிலத்தை அடுத்து 2ம் இடத்தைப் பெற்றுள்ளது தமிழகம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு தான் அதிக அளவில் 50 சிறப்புப் பொருளாதார மண்டலங்களைப் பெருக்கி நாட்டிலேயே முதலிடத்தில் உள்ளது என திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில் பெருமிதம் தெரிவிக்கப்பட்டுள்ளது... வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் 2022-2023 ஆம் ஆண்டிற்கான ஆண்டறிக்கை இதைப் புலப்படுத்தியுள்ளது எனவும், பிரதமர் மோடி ஆட்சி செய்த குஜராத் மாநிலத்தில் 21 சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் மட்டுமே உள்ளன எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்