உயிருக்கு போராடிய மகனை காப்பாற்ற நினைத்த தாயும் துடித்து பலி
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள விஸ்வநத்தம் காகா காலனியில் வசிப்பவர் முத்தையா. இவரது மகள் ராஜேஸ்வரி, கணவனை பிரிந்து தனது மகன் தர்ஷனுடன் தந்தை முத்தையா வீட்டில் வசித்து வந்தார். முத்தையா வீட்டருகே வசித்து வரும் கணேசன் என்பவர், தான் கட்டிவரும் புதிய வீட்டிற்காக கழிவு நீர் தொட்டியும்- மழைநீர் சேகரிப்பு தொட்டியும் அமைத்து வருகிறார். இதற்கென சுமார் 8- அடியில் குழி தோண்டியிருந்த நிலையில், மழை காரணமாக அக்குழியில் நீர் நிரம்பியுள்ளது. இந்த நிலையில் சிறு நீர் கழிக்கச் சென்ற சிறுவன் தர்ஷன் தவறுதாலாக அக்குழியில் விழுந்துள்ளான்.மகனை காப்பாற்ற முயன்ற ராஜேஸ்வரி, தானும் கழிவு நீர் தொட்டியில் விழுந்தார். ஆனால் தாயும் மகனும் தண்ணீரில் தத்தளித்த நிலையில், சம்பவ இடத்தியே உயிரிழந்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார் தாய் மகன் இருவரையும் மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு உடற் கூறாய்விற்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.