குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம்.. - "வேங்கைவயல் சம்பவத்தை நினைவுபடுத்துகிறது" -கோபத்தில் கொந்தளித்த சமூக ஆவர்லர்கள்

x

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை குருவாண்டான்தெரு பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மாட்டுச் சாணம் கலக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே உள்ள சங்கம்விடுதி ஊராட்சிக்கு உட்பட்ட குருவாண்டான்தெரு பகுதியில் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அப்பகுதியில் வசித்து வரும் மக்களுக்கு கடந்த 3 தினங்களாக வயிறு வலி, வாந்தி, மயக்கம் ஏற்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் வினியோகி்கப்பட்ட குடிநீரில் மாட்டு சாணம் கலந்து வந்ததாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். இதனையடுத்து அப்பகுதி இளைஞர்கள் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் ஏறி பார்த்த போது அங்கு மாட்டு சாணம் இருந்தது உறுதியானது. இது குறித்து விசாரணை நடத்தி அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும் எனவும் சமூக ஆவர்லர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்