இன்னும் ஒரே இரவு... தமிழகம் முழுவதும் இன்றே அலைமோதும் மக்கள் கூட்டம்

x

நாளை உலகப் புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ள நிலையில் மதுரை அவனியாபுரம் காய்கறி சந்தையில் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது... இந்நிலையில் பொங்கலுக்கு தேவைப்படும் பொருட்களை வாங்க இன்று சந்தையில் மக்கள் குவிந்துள்ள நிலையில்

போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் ராஜாஜி காய்கறி சந்தையில் பொங்கல் படையலுக்கு தேவையான காய்கறிகள் விற்பனையாகி வருகின்றன... செங்கரும்பு, மஞ்சள் கொத்து விற்பனையும் களைகட்டியுள்ளது...

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள புஞ்சை புளியம்பட்டியில் பொங்கல் பொருட்கள் வியாபாரம் சூடுபிடித்துள்ளது... பேருந்து நிலையம், திரு.வி.க. கார்னர், பவானிசாகர் சாலை ஆகிய பகுதிகளில் தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டு பூஜைப் பொருட்கள், கரும்பு விற்பனை செய்யப்படுகின்றன... சம்பங்கி மாலை 400 ரூபாய்க்கு மேல் விற்பனையாகிறது.

புதுச்சேரி குபேர் மார்க்கெட் உள்ளிட்ட பல்வேறு சந்தைகளில் கரும்பு, மஞ்சள், புதுப்பானை, பூ விற்பனை களைகட்டியுள்ளது... கரும்பு ஜோடி 100 ரூபாய்க்கு விற்பனையாகிறது... மஞ்சள், பூக்கள் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. காட்டு மல்லி ஆயிரத்து 400 ரூபாய்க்கும், மல்லிகைப்பூ கிலோ 3 ஆயிரம் ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது


Next Story

மேலும் செய்திகள்