ஹோட்டலில் பணம் திருடியதாக சொல்லி சிறுவனை கயிறு கட்டி தரதரவென இழுத்து சென்ற நபர் - அதிர்ச்சி வீடியோ

x

பொள்ளாச்சியில் தனது உணவகத்தில் சிறுவன் பணம் திருடியதாக குற்றம் சாட்டி இந்து முன்னணி பிரமுகர் அச்சிறுவனை கயிற்றில் கட்டி இழுத்துச் சென்ற வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெகமத்தில் இந்து முன்னனி பிமுகர் கணேசன் தன் உணவகத்தில் நேபாள நாட்டைச் சேர்ந்த சிறுவன் பணம் திருடியதாக குற்றம் சாட்டி ஓம் பிரகாஷ், தர்சன் ஆகியோருடன் சேர்ந்து சிறுவனை கயிற்றில் கட்டி ரோட்டில் முரட்டுத்தனமாக இழுத்துச் சென்று போலீசில் ஒப்படைத்தார். இந்த வழக்கில் ஏற்கவே கணேசன், தர்சன், ஓம் பிரகாஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த வழக்கில் போலீசார் பணம் திருடியதாக குற்றம் சாட்டப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 17 வயது சிறுவனை கைது செய்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்