போலீஸ் ஸ்டேஷனில் கையெழுத்து போட்டதும் சிரித்து கொண்டே நடிகை கஸ்தூரி சொன்ன வார்த்தை
நீதிமன்ற உத்தரவின்பேரில் நடிகை கஸ்தூரி காவல் நிலையத்தில் கையெழுத்திட்டார்.
தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கைதான நடிகை கஸ்தூரிக்கு, நிபந்தனை ஜாமின் அளித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. தினமும் எழும்பூர் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்றும் கூறியிருந்தது. இந்நிலையில், நீதிமன்ற உத்தரவின்பேரில் எழும்பூர் காவல் நிலையத்தில் நடிகை கஸ்தூரி ஆஜராகி கையெழுத்திட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 4 நாட்களுக்குப்பின் மீண்டும் சந்தித்தது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்தார்.
Next Story