டாஸ்மாக் திறக்க வேண்டும் என போராடிய பெண்கள்... "தலைக்கு ரூ.300 கொடுத்து கலெக்டரே செய்த அசிங்கம்"
டாஸ்மாக் திறக்க வேண்டும் என போராடிய பெண்கள்...
"தலைக்கு ரூ.300 கொடுத்து கலெக்டரே செய்த அசிங்கம்" - கொந்தளிக்கும் பாமக பாமக
தர்மபுரியில் மதுக்கடை திறக்க பணம் கொடுத்து பெண்களை போராட வைத்த விவகாரத்தில், மாவட்ட ஆட்சியர், டாஸ்மாக் மேலாளரை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று பாமக வழக்கறிஞர் பாலு வலியுறுத்தியுள்ளார். வேலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எதற்காக என்று சொல்லாமல் 300 ரூபாய் கொடுத்து பெண்களை அழைத்துச் சென்று, மதுக்கடைக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட வைத்தது அசிங்கம் என்று கூறினார். இல்லாத ஒன்றை இருப்பது போன்று காட்டும் முயற்சியை தமிழக அரசு தொடர்ந்து செய்து வருவதாக தெரிவித்த பாலு, இதே போன்றுதான், வன்னியர்கள் பத்தரை விழுக்காட்டை விட அதிக இடங்களை பெறுகிறார்கள் என்று தவறான தோற்றத்தை ஏற்படுத்த முயல்வதாக குற்றம் சாட்டினார்.
Next Story