சொந்த ஊருக்கு படையெடுத்த மக்கள்.. மெல்ல மெல்ல நகர்ந்த வாகனங்கள் - தாம்பரத்தில் திணறிய வாகன ஓட்டிகள்
தீபாவளி பண்டிகையை ஒட்டி, சென்னையில் இருந்து மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பெருந்திரளாக புறப்பட்டுச் செல்வதால், ஜிஎஸ்டி சாலையில் நெரிசலை கட்டுப்படுத்த பல்லாவரத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால், பல்லாவரம் பான்ட்ஸ் சிக்னலில் இருந்து நாகல்கேணி வழியாக திருநீர்மலை செல்லும் முக்கிய பிரதான சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த சாலையில், போக்குவரத்து காவலர்கள் அதிகம் இல்லை என்பதால், வாகனங்கள் ஒவ்வொன்றும் முந்தி செல்ல முற்படுவதால் நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
Next Story