சிபிசிஎல் நிறுவனத்தை கண்டித்து 11வது நாளாக தொடர்ந்து போராடும் விவசாயிகள்

x

சிபிசிஎல் நிறுவனம் 31 ஆயிரத்து 500 கோடி மதிப்பில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை விரிவாக்கத்தை செய்ய திட்டமிட்டுள்ளது. இதற்காக, கோபுராஜபுரம், நரிமணம், முட்டம், பனங்குடி உள்ளிட்ட பகுதிகளில் 620 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் பனங்குடியில் விவசாயிகள் 11வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கு மீள்குடியமர்வு நிவாரணம் வழங்கப்படவில்லை என விவசாயிகள் குற்றம்சாட்டினார்கள்.


Next Story

மேலும் செய்திகள்