தந்தையை தாக்கிய தம்பி தடுத்த அண்ணனை சரமாரியாக குத்திய தம்பி.. மதுராந்தகத்தில் பரபரப்பு | Maduranthakam

x

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே உள்ள குமாரவாடி பகுதியைச் சேர்ந்த நாகராஜ் என்பவர் நேற்று இரவு மதுபோதையில் அவரது தந்தை நீலகண்டனை தாக்கியுள்ளார். அவரை தடுக்க முயன்ற அவரின் அண்ணன் செல்வத்தை, நாகராஜ் கத்தியால் குத்தினர். ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு மருத்துவமனைக்கு செல்வத்தை கொண்டுச் சென்ற போது, அவரை பரிசோதித்த டாக்டர், வரும் வழியிலே செல்வம் இறந்து விட்டதாக கூறியுள்ளனர். தகவல் அறிந்து வந்த படாளம் போலீசார், நாகராஜனை பிடித்த பொழுது அவருக்கு கையில் காயம் ஏற்பட்டதால், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்