"ஓடி போய் கைய்ய வச்சி குத்துனாங்க.. என்னைய எப்புடி கடிச்சிருக்காங்க பாருங்க.." -கதறும் MLAவின் தங்கை

x

திருப்பரங்குன்றம் ஜி.எஸ்.டி சாலையில் வசித்து வருபவர் காந்திமதி. இவர், மதுரை வடக்கு தொகுதி திமுக எம்.எல்.ஏவான கோ.தளபதியின் சகோதரி ஆவார். வடகரை புதூரில் கடந்த 20 ஆண்டுகளாக காந்திமதி கல்குவாரி நடத்தி வந்த நிலையில், காந்திமதியின் கல்குவாரிக்கு அருகே, அவரது சகோதரர் தளபதியும் கல்குவாரி அமைக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. இது குறித்து கேட்பதற்காக கடந்த 2 ஆம் தேதி சகோதரனின் வீட்டிற்கு சென்ற காந்திமதி மற்றும் அவரது மகளை, தளபதியின் குடும்பத்தார் கண்மூடித்தனமாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. காந்திமதி அளித்த புகாரின் அடிப்படையில், தளபதியின் மனைவி சாவித்திரி மற்றும் அவரது மகன் மீது போலீசார் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்...


Next Story

மேலும் செய்திகள்