லாரி உரிமையாளர் சங்கத்தின் திடீர் முடிவு.. தூத்துக்குடி டோல் கேட்டில் பரபரப்பு
தூத்துக்குடி புதூர் பாண்டியாபுரத்தில் உள்ள சுங்கச்சாவடியில், லாரிகளுக்கு இரண்டு முறை கட்டண வசூலிப்பதை கண்டித்து, லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர். சுங்கச்சாவடியில் திடீரென லாரிகளை நிறுத்தி லாரி உரிமையாளர் சங்கத்தினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மறியலில் ஈடுபட்டனர். இதனால், வாகனங்கள் அணிவகுத்து நின்று போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தொடர்ந்து, போலீசார் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், பொதுமக்கள் பாதிக்கப்படுவதை தவிர்க்க லாரி சங்கத்தினர் போராட்டத்தை கைவிட்டனர்.
Next Story