ஊராட்சி மன்ற துணை தலைவர் கைது.. "பெர்சனல் மோட்டிவ்".. மனைவி சொல்லும் பரபரப்பு காரணம்

x

கரூர் மாவட்டம் வெள்ளியணை அருகே சூர்யா நகர் பகுதியில் சிமெண்ட் சாலை அமைப்பதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. அப்போது, அதே பகுதியை சேர்ந்த திமுக கிளைச் செயலாளர் லோகநாதன் என்பவர், வீட்டின் அருகே, தனக்கு சொந்தமான பட்டா நிலம் இருப்பதால் சிமெண்ட் சாலை அமைக்க வேண்டாம் என ஒப்பந்ததாரரிடம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அப்போது ஊராட்சி துணைத்தலைவர் சிவக்குமார் மற்றும் லோகநாதன் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், லோகநாதனை சிவக்குமார் தாக்கியதாக கூறப்படுகிறது. அதனைத்தொடர்ந்து லோகநாதன் அளித்த புகாரின்பேரில் சிவக்குமாரை போலீசார் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்