கடும் வெயிலில் ரோட்டில் நின்ற கர்ப்பிணி - பார்த்ததுமே அண்ணனாக கலெக்டர் கொடுத்த சர்ப்ரைஸ்
கடும் வெயிலில் ரோட்டில் நின்ற கர்ப்பிணி - பார்த்ததுமே அண்ணனாக கலெக்டர் கொடுத்த சர்ப்ரைஸ்
காரைக்காலில் பேருந்துக்காக காத்திருந்த நிறை மாத கர்ப்பிணிக்கு லிப்ட் கொடுத்து இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார் ஆட்சியர் மணிகண்டன்... பட்டினச்சேரி மீனவ கிராமத்தில் தனது காரில் சென்ற போது மருத்துவமனை அருகில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் கடும் வெயிலில் நின்று கொண்டிருந்த நிறைமாத கர்ப்பிணிக்கு காரில் லிஃப்ட் கொடுத்த ஆட்சியர், செல்லும் வழியில் கர்ப்பிணி நவோதா மேரியின் உடல்நிலை, குடும்பம் குறித்து நலம் விசாரித்துக் கொண்டே ஒரு சகோதரரைப் போல் பழகியுள்ளார்... பிறக்கும் குழந்தையை நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தி, ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுக்குமாறு ஆட்சியர் மணிகண்டன் கேட்டுக் கொண்டார்...
Next Story