நெத்தியில் பாய்ந்த கத்தி... ரத்த வெள்ளத்தில் 76 வயது மூதாட்டி... சிக்கிய 86 வயது முதியவர்

x

கன்னியாகுமரி அருகே 76 வயது மனைவியை கொலை செய்த 86 வயது முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் சீதப்பால் பகுதியில் உள்ள வீட்டில், 86 வயதான சாம் அலெக்சாண்டர் மற்றும் 76 வயதான ரோஸ்லின் புளோரா தம்பதியினர் வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் அலெக்ஸாண்டர் தனது மனைவி ரோஸ்லின் புளோராவை, மதுபோதையில் சுத்தியலால் தலையில் தாக்கி, கத்தியால் நெற்றியில் குத்தியதுடன், கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். தகவலறிந்த போலீசார் சாம் அலெக்சாண்டரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட ரோஸ்லின் ப்ளோராவின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்