காவடி எடுத்து போலீசார் வினோத வேண்டுதல்.. | Kanyakumari | Police | Thanthi TV

x

கன்னியாகுமரி மாவட்டத்தில் குற்றங்கள் குறைந்து பொதுமக்கள் அமைதியாக வாழ வேண்டி குமாரகோவில் வேளிமலை சுப்பிரமணிய சாமி கோவிலுக்கு பாரம்பரிய முறைப்படி போலீசார் காவடி எடுத்துச் சென்ற சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தக்கலை காவல் நிலையம் மற்றும் பொதுப் பணித்துறை அலுவலக வளாகத்தில் காவடி பூஜைக்கு வைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. இதில் பத்மநாபபுரம் நீதிபதிகள், தக்கலை டி.எஸ்.பி., காவல் ஆய்வாளர்கள், போலீசார் பலர் கலந்து கொண்டனர். நெற்றிப் பட்டம் சூட்டப்பட்ட யானை மீது பால்குடமும், புஷ்பக் காவடிகளும் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. பல்வேறு பகுதிகளில் இருந்து புஷ்பக் காவடிகள், பறவைக் காவடிகள், வேல்காவடி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட காவடிகள் குமாரகோவிலுக்கு பவனியாக சென்றன..


Next Story

மேலும் செய்திகள்