வட மாநில தொழிலாளி கத்தியால் குத்தி கொலை.. - காஞ்சியில் பதற்றம்..
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் அருகே வட மாநில தொழிலாளி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்தில் அவரது நண்பர்கள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குன்றத்தூர் அடுத்த திருமுடிவாக்கம், பழந்தண்டலம் பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மஞ்சய்பஸ்வான் என்பவர் தனது நண்பர்களான நேபாள நாட்டை சேர்ந்த ஜித்தையன் மகரா மற்றும் ராம் ஆகியோருடன் தங்கி வேலை செய்து வந்தார். இந்நிலையில், இன்று கம்பெனியில் வேலை பார்த்து கொண்டிருந்த போது, திடீரென ஆத்திரமடைந்த ஜித்தையன் மகரா கத்தியை எடுத்து மஞ்சய்பஸ்வானை குத்தியதில் அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விசாரணையில் இரவு நேரத்தில் மது அருந்தும் போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்ததன் காரணமாக கத்தியால் குத்தி கொலை செய்தது தெரியவந்தது. இதை யடுத்து ஜித்தையன் மகரா மற்றும் ராம் ஆகிய இரண்டு பேரையும் போலீசார் கைது செய்து, கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.