கரைபுரண்டோடும் வெள்ளம்..ஆபத்தை கொஞ்சம் கூட உணராமல் பொதுமக்கள் செய்த செயல் | Kallakurichi

x

கள்ளக்குறிச்சி அருகே தரைப்பாலம் மூழ்கியதால், இறந்தவரின் சடலத்தை ஆபத்தான முறையில் தண்ணீரில் தூக்கிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. கூத்தக்குடி அண்ணா நகர் பகுதியை சேர்ந்த அய்யம்பெருமாள் என்பவர் உயிரிழந்த நிலையில், அவரது உடல் இறுதி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. ஆனால், மணிமுக்தா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், கூத்தக்குடி - அண்ணாநகரை இணைக்கும் தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியதால், சடலத்தை தண்ணீரில் தூக்கிச் செல்லும் நிலை ஏற்பட்டது. தரைப்பாலம் நீரில் மூழ்கும்போது, 10 கிராம மக்கள் 20 கிலோ மீட்டர் சுற்றி செல்வதாகவும், இதனால் அங்கு மேம்பாலம் கட்டித் தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்