மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் விடாமல் பெய்யும் கனமழை - ஆறுகளில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம்..
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகேயுள்ள கோட்டைமலை ஆற்றில் தொடர்மழை காரணமாக மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேற்குதொடர்ச்சி மலை பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில், கோட்டைமலை ஆறு, தலையனை ஆறு, மஞ்சள்கேனி ஆறு மற்றும் வாலை மலையாறு உள்ளிட்ட பல்வேறு ஆறுகளில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும் அப்பகுதியில் உள்ள ஏரி, குளங்களில் நீர் நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
Next Story