சிறுத்தையால் பறிபோன சிறுமி உயிர்... கண்ணீர்மல்க தந்தை வெளியிட்ட வீடியோ - கலங்கிநிற்கும் நீலகிரி
நீலகிரி மாவட்டம் பந்தலூரில், ஆட்கொல்லி சிறுத்தை தாக்கி உயிரிழந்த 3 வயது சிறுமியின் உடல், அவரது சொந்த ஊரான ஜார்கண்ட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது.
பந்தலூர் அருகேயுள்ள மேங்கோ ரேஞ்ச் பகுதியில், தனது தாயுடன் சென்று கொண்டிருந்த ஜார்கண்ட்டை சேர்ந்த 3 வயது சிறுமி நான்சி என்பவரை சிறுத்தை தாக்கி கொன்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதே பாணியில் கடந்த மாதம் பழங்குடியினப் பெண் ஒருவரும் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்க நிலையில், இருவரின் குடும்பங்களுக்கும் தலா 10 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். தொடர்ந்து, சிறுமியின் உடல் அவரது சொந்த ஊரான ஜார்கண்ட்டிற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், தன் மகளின் உயிரிழப்பில் தன்னுடன் குடும்பமாய் நின்று போராடிய மக்களுக்கு நன்றி தெரிவித்து சிறுமியின் தந்தை வெளியிட்ட வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.