``இது எப்படி சாத்தியம்..?'' மிரண்ட அதிகாரிகள்... வெளி வந்த அதிர்ச்சிகர உண்மை
கடலூர் முதுநகர் பகுதியில் சாலை ஓரம் மீன்கள் விற்கப்படுவதாக உணவு பாதுகாப்பு துறைக்கு தகவல் வந்தது. அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்ட போது சங்கரா, கிழங்கான், வவ்வால் என வகைவகையாய் மீன்கள் படுஜோராக விற்கப்பட்டு வந்த நிலையில், அவற்றை ஆய்வு செய்த போது, அவை அத்தனையும் அழுகிய மீன்கள் என்பதைக் கண்டறிந்து அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். 10 நாள்களுக்கு முன்பு கேரளாவில் பிடிக்கப்பட்டு அங்கு விற்பனையாகாமல் இங்கு அனுப்பி வைக்கப்பட்டதும் அம்பலமாகியுள்ளது. தொடர்ந்து வியாபாரிகளை எச்சரித்த அதிகாரிகள் அனைத்து மீன்களையும் அழித்து அப்புறப்படுத்தினர்.
Next Story