காட்டுக்குள் தொடரும் அட்ராசிட்டி - வனத்துறையினரை சுற்றி வளைத்து சிறைபிடித்த பொதுமக்கள்
பென்னாகரம் அருகே பயிர்களை சேதப்படுத்தும் காட்டு விலங்குகளை கட்டுப்படுத்தாத வனத்துறை அதிகாரிகளை கிராமமக்கள் சிறை பிடித்தனர்.
தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த பூதிப்பட்டி கிராமம் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. இங்குள்ள விவசாயிகள் சாமை, கடலை, ராகி உள்ளிட்ட பயிர்களை அதிகமாக சாகுபடி செய்து வருகின்றனர். இந்நிலையில், காட்டு யானை மற்றும் பன்றிகள் அடிக்கடி விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் நஷ்டமடைந்து வருகின்றனர். இதனை கட்டுப்படுத்த கோரி, வனத்துறையினரிடம் பலமுறை மனு கொடுத்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் பூதிபட்டிக்கு ரோந்து வந்த பென்னாகரம் வனச்சரக அலுவலர் செந்தில்குமார் தலைமையிலான வனத்துறையினரை சிறை பிடித்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.