#JUSTIN || வயிற்றில் இருக்கும் சிசுவின் பாலினத்தை கண்டுபிடித்து சொன்ன கும்பல் கைது
வயிற்றில் இருக்கும் சிசுவை கண்டறிந்த கும்பல் கைது. வயிற்றில் இருக்கும் சிசு ஆணா, பெண்ணா என கண்டறிந்து சொல்வதாக குற்றம் சாட்டப்பட்ட 3 பேர் கைது. அதிரடியாக களத்தில் இறங்கி சுற்றி வளைத்து கைது செய்த ஊரக நலத்துறை இணை இயக்குனர் மருத்துவர் சாந்தி. கள்ளக்குறிச்சியை சேர்ந்த முருகேசன், நடமாடும் மருத்துவ கருவி மூலம், கருவில் உள்ள சிசுவின் பாலினம் கண்டறிந்து சொல்லி உள்ளார். ஒரு நபருக்கு 13 ஆயிரம் ரூபாய் பெற்றுக் கொண்டு, நான்கு நபர்களுக்கு அவர் நடமாடும் கருவி மூலம் பரிசோதனை செய்து அறிவித்துள்ளார். கைது செய்யப்பட்ட முருகேசன், ஏற்கனவே சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்ததாக கள்ளக்குறிச்சியில் கைதானவர்.
Next Story