எல்லா பிரச்சனைக்கும் மூல காரணம்.. போலீசே உடந்தையாக இருந்தது அம்பலம்.. அதிர்ச்சியில் சென்னை காவல்துறை

x

மெத்தபெட்டமையின் போதை பொருட்கள் விற்பனைக்கு உடந்தையாக இருந்ததாக காவலர் மீது வழக்கு பதிவு கைது

சென்னை அசோக் நகர் காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர் ஜேம்ஸ்(35) 2016 பேட்ச் மற்றும் அவரது நண்பர் சுரேந்தர் நாத்(37) ஆகிய இருவரும் மெத்தபெட்டமையின் விற்பனையில் ஈடுபட்டதாக இணை ஆணையர் தனிப்படை போலீசார் கைது செய்து வடபழனி காவல் நிலையத்தில் ஒப்படைப்பு

வடபழனி போலீசார் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வடபழனி ஒட்டகபாளையம் பகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் மெத்த பெட்ட மெயின் என்பது பொருள் விற்பனை நடைபெறுவதாக தனிப்படை போலீஸ்சாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் அங்கு சென்று சோதனை மேற்கொண்ட போது சுரேந்தர்நாத் என்பவர் விற்பனை ஈடுபடுவதாக அவரிடம் விசாரணை மேற்கொண்டபோது அவருக்கு உடந்தையாக அசோக் நகர் காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர் ஜேம்ஸ் என்பவர் உதவியாக இருந்தது தெரிய வந்துள்ளது.

இருவரிடமும் 10 கிராம் மெத்தபட்டமையின் என்பது பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது...

எனவே அயனாவரம் பகுதியை சேர்ந்த காவலர் ஒருவர் மெத்த பெட்டமையின் என்பது பொருள் விற்பனை செய்ததற்கு கைது செய்து நீலாங்கரை போலீசார் சிறையில் அடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

போலீஸ்காரர் ஜேம்ஸ் கடந்த 2016 ஆம் ஆண்டு, தமிழ்நாடு சிறப்பு இளைஞர் காவல் படையில்( YB) சேர்ந்து,

பின்னர் சீருடைய பணியாளர் நடத்திய தேர்வெழுதி காவலரானவர்


Next Story

மேலும் செய்திகள்