இளைஞனுடன் இன்ஸ்டாவில் பழக்கம்.. ஏகபோகமாக கொண்டாடிய பிறந்தநாள்.. சென்னையில் காத்திருந்த அதிர்ச்சி

x

தோழிகளான சிறுமிகள் இருவரும் மாயமான நிலையில், சிறுமி ஒருவரின் தாயார் அளித்த புகாரின் பேரில் போலீசார் தேடி வந்தனர். ஒரே வகுப்பில் பயின்ற இருவரும், தருண் என்ற இளைஞருடன் இன்ஸ்டா கிராமில் மூலம் பழகி வந்திருக்கின்றனர். சம்பவத்தன்று, தருணுக்கு பிறந்த நாளான நிலையில், இருவரும் அவரின் வீட்டிற்கு சென்று திரும்பி வரும் போது, சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வைத்து மீட்கப்பட்டுள்ளனர். முடிவில், 19 வயது இளைஞரான தருணை, போக்சோவின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்த போலீசார், பின்னர் அவரை காவல் நிலைய ஜாமீனில் விடுவித்தது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்