சென்னை பக்கம் திரும்பிய கண்...இந்த 9 மாவட்டங்களுக்கு ஹை அலர்ட் வார்னிங் கொடுத்த வானிலை மையம்

x

சென்னையி​​ல் இரவு முதல் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் விட்டு விட்டு, பரவலாக மழை பெய்து வரும் நிலையில், 9 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது.சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மற்றும் புதுச்சேரியில் காலை 7 மணி வரை இடி மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதேபோல, மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், சென்னையில்நேற்று பகல் முழுவதும் பனிப்பொழிவு மற்றும் லேசான தூறல் என இருந்த வானிலை, இரவு நேரத்தில் சட்டென மாறி பலத்த காற்றுடன் சென்னையின் பல்வேறு இடங்களில் மழையாக கொட்டியது. சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், அண்ணாசாலை. தியாகராயகநகர், சைதாப்பேட்டை , வடபழனி, அம்பத்தூர், கொளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் சில இடங்களில் காற்றுடன் மழை பெய்தது. தரமணி, வேளச்சேரி என நகரின் வேறு சில பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது, இரவு தொடங்கி அதிகாலை வரை விட்டு விட்டு நீடித்த மழையால், தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.


Next Story

மேலும் செய்திகள்