விமானத்தில் தனியாக ஏறிய சிறுவன் செய்த சம்பவம்... சென்னை ஏர்போர்டில் பரபரப்பு

x

சென்னை விமான நிலையத்தில் இருந்து கொல்கத்தா செல்ல இருந்த இன்டிகோ விமானம் நடைமேடையில் தயார்

நிலையில் இருந்து. அதில் தனியாக பயணம் செய்த திரிபுராவைச் சேர்ந்த 17 வயது சிறுவன், அவசர கால கதவை திறப்பதற்கான பட்டனை மறைத்து ஒட்டப்பட்டு இருந்த பிளாஸ்டிக் ஸ்டிக்கரை கிழித்ததால், எச்சரிக்கை மணி ஒலித்தது. இதனால் விமானத்தில் இருந்து இறக்கி விடப்பட்ட அச்சிறுவனிடம் எழுதி வாங்கிக் கொண்ட விமான நிலைய போலிஸார், உறவினர்களிடம் அவனை ஒப்படைத்தனர். இதனால் அந்த விமானம் சுமார் ஒரு மணி நேரம்

தாமதமாக கொல்கத்தா புறப்பட்டு சென்றது.


Next Story

மேலும் செய்திகள்