என்னை கைது செய்.. என் சொந்தத்தை தொடாதீர்கள்..! NLC மூடாமல் விட மாட்டேன்... களேபரமான கடலூர் மாவட்டம்

x

என்எல்சி நிர்வாகத்தை எதிர்த்து நடந்த போராட்டத்தின்போது கைது செய்யப்பட்ட அன்புமணி ராமதாஸ், காவல்துறை உயர் அதிகாரியுடன் நடத்திய உரையாடலை விவரிக்கிறது இந்த தொகுப்பு..

என்.எல்.சி விரிவாக்கப் பணிகளை எதிர்த்து, பாமக சார்பில் நடைபெற்ற போராட்டம் வன்முறைக் களமாக மாறியது. இந்தப் போராட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உட்பட ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட அன்புமணி ராமதாஸ், தனியார் திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டார்.

இதனிடையே, போராட்டம் தொடர்பாக அன்புமணி ராமதாஸிடம் காவல்துறை தரப்பில் விழுப்புரம் சரக டிஐஜி ஜியா உல் ஹாக் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது ஒருவரை ஒருவர் நலம் விசாரித்துக் கொண்டனர்

இதனிடையே, போராட்டத்தில் பங்கேற்று, கைதானவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டாம் என டிஐஜியிடம் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்தார்

இருவரும் உரையாடிக் கொண்டிருந்தபோதே, சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி அருணை வாட்ஸ் அப் காலில் தொடர்புகொண்ட டிஐஜி ஜியா உல் ஹாக், அன்புமணியிடம் பேசுமாறு தனது செல்போனை அவரிடம் கொடுத்தார். அப்போது வாட்ஸ் அப் காலில் சிக்னல் கோளாறு ஏற்பட்டதால், தனது வழக்கறிஞர் பாலுவிடம் அன்புமணி செல்போனை கொடுத்து விட்டார்.

ஏடிஜிபியிடம் யாரையும் கைது செய்ய வேண்டாம் என கூறுமாறு, டிஐஜியிடம் அன்புமணி கேட்டுக்கொண்டார்.

சிக்னல் கோளாறு சரியாகவே, ஏடிஜிபி அருணும், அன்புமணியும் செல்போனில் போசிக்கொண்டனர்.

எங்களை கைது செய்யுங்கள் எந்தவொரு பிரச்சினையும் கிடையாது, தொண்டர்களை விட்டுவிடுங்கள் என ஏடிஜிபியிடம் அன்புமணி கேட்டுக்கொண்டார்.

ஏடிஜிபியிடம் செல்போன் உரையாடல் முடிந்ததை அடுத்து, டிஐஜியிடம், தான் சென்னை செல்ல இருப்பதாகவும், ஏடிஜிபியிடம் பேசி சுமூக முடிவு எடுக்கமாறும் அன்புமணி தெரிவித்தார்.

ஏற்கனவே, ஜெயங்கொண்டத்துல நிலக்கரி சுரங்கத்துக்காக எடுத்த விவசாய நிலங்களை, தமிழக அரசு திருப்பிக் கொடுத்ததாகவும், அதேபோல் இந்த நிலத்தையும் திருப்பிக் கொடுக்கலாமே? என டிஐஜியிடம் அன்புமணி கேள்வி எழுப்பினார்.


Next Story

மேலும் செய்திகள்