ஆதிபராசக்தியான அன்னபூரணிக்கு 3வது திருமணம்... இதுவும் காதல் தான்..

x

அருள்வாக்கு என்றாலே அன்னபூரணி.. அன்னபூரணி என்றாலே அருள்வாக்கு எனும் அளவுக்கு இணையத்தை தன் அருளால் கலங்கடித்து வந்தவர் இவர்...

பளிச் கலரில் உடைகள், மேனியெங்கும் நகைகள்.. இதெல்லாம் ஒரு படி மேலே போய் கிரீடம், சூலாயுதம், சிம்மாசனம் என வித்தியாசமான அம்மன் போல போஸ் கொடுத்து பாப்புலர் ஆனவர் தான் இந்த அன்னபூரணி...

தனியார் டிவி நிகழ்ச்சியால் பாப்புலரான அன்னபூரணி இவரின் ப்ளாஷ்பேக், சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி வரை சென்றிருந்தாலும் கூட, நான் தான் அம்மன்... முன்னாள் கணவர் அரசு தான் சிவன் என்பது போல சிலை எல்லாம் வைத்து மாஸ் காட்டினார் இவர்..

யூட்யூபில் தரிசனம், ஆன்லைன் அருள் என மூக்குத்தி அம்மன் படம் போல நாளுக்கு நாள் இவரின் மவுசு கூடிக்கொண்டே போனது...

இந்த சூழலில் தான் கடவுளுக்கே பாதுகாப்பு இல்லாததால் கல்யாணம் பண்ணிக்க போறேன் என அறிவித்தார் அன்னபூரணி...


Next Story

மேலும் செய்திகள்