அமேசானில் ஆர்டர் போட்டவரை அதிர வைத்த டெலிவரி - பார்சலை பிரித்ததும் பகீர் | Chennai | Amazon | ThanthiTV
வடபழனியை சேர்ந்த கிஷோர் கிருஷ்ணா அமேசானில் ஆசை ஆசையாக லேப்டாப் ஆர்டர் செய்துள்ளார். ஆனால் அவருக்கு நவம்பர் 18 ஆம் தேதி லேப்டாப்புக்கு பதிலாக கடப்பா கல் பார்சலில் டெலிவரி செய்யப்பட்டுள்ளது. பார்சலை பிரித்து பார்த்த கிஷோர் அமேசான் சேவை மையத்தில் புகார் தெரிவித்ததாகவும், 4 நாட்களில் விசாரித்து பதில் சொல்வதாக கூறி 11 நாட்கள் இழுத்தடித்ததாக குற்றம் சாட்டியுள்ளார். இழுத்தடித்தது மட்டுமல்லாது இறுதியில் உங்கள் பக்கம்தான் மிஸ்டேக் எனச் சொல்லி பணத்தை திருப்பி தரமுடியாது என அமேசான் தரப்பில் சொல்லப்பட்டு விட்டதாகவும், அதனால் மனம் உடைந்து வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாகவும் தெரிவித்தார். பார்சலை பிரித்த போது எடுத்த வீடியோவை கூட அமேசான் தரப்பு கேட்கவில்லை என கூறும் கிஷோர், கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளார். ஆன்லைனில் ஆசையாக லேப்டாப் ஆர்டர் செய்த நபருக்கு கடப்பா கல் அனுப்பப்பட்டுள்ள வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.