JUSTIN || 'பொய்யான தகவல்' - அதிமுக நிர்வாகி மீது பாய்ந்த வழக்கு
சென்னை மெரினாவில் மழை நீரால் மின்கசிவு ஏற்பட்டுள்ளது என பொய்யான தகவலை சமூக வலைதளத்தில் பரப்பியதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு வழக்குப்பதிவு
கடந்த 30 ஆம் தேதி சி டி ஆர் நிர்மல் குமார் தனது சமூக வலைதள பக்கத்தில் பொய்யான தகவலை பதிவிட்டதால் சர்ச்சை
Tn fact check குழுவும் மியான்மரில் நடந்ததை சென்னை மெரினாவில் நடந்ததாக மழை நேரத்தில் தெரிவித்து பொய்யான தகவல் என்று விளக்கம் அளித்து இருந்தது
இதையடுத்து சிடிஆர் நிர்மல் குமார் அந்தப் பதிவை நீக்கினார்
சமூக வலைதளத்தை கண்காணிக்கும் சென்னை காவல்துறை பிரிவு, பொய்யான பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக நிர்வாகி சி டி ஆர் நிர்மல் குமார் பதிவு தொடர்பாக புகார் அளித்து நடவடிக்கை
மூன்று பிரிவுகளின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்
சென்னை உயர்நீதிமன்றம் ctr நிர்மல் குமாருக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து அவதூறு பரப்புவது தொடர்பாக தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது