அதிகாரிகள் எடுத்த அதிரடி நடவடிக்கை.. 3.9 டன் எடையிலான கஞ்சா அழிப்பு
உலக போதை பொருள் தடுப்பு தினத்தையொட்டி, செங்கல்பட்டு அருகே தென்மேல்பாக்கத்தில் 3.9 டன் எடையிலான கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் எரித்து அழிக்கப்பட்டன.
தென்மேல்பாக்கத்தில் உள்ள GJ Multiclave என்னும் மருத்துவ கழிவுகள் அழிக்கும் இடத்தில், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உட்பட பல பகுதிகளில் கைப்பற்றப்பட்ட கஞ்சா உள்ளிட்ட 3.9 டன் எடையிலான போதை பொருட்கள் எரித்து அழிக்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் காவல்துறை வடக்கு மண்டல தலைவர் உட்பட பல அதிகாரிகள் பங்கேற்றனர்.
Next Story