SL vs IND | 2-வது ஒருநாள் போட்டியில் இந்தியாவை வீழ்த்தியது இலங்கை
இலங்கைக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் 32 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி அடைந்தது.
- இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.
- முதல் ஒருநாள் போட்டி tie ஆன நிலையில், கொழும்பில் நடைபெற்ற 2வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது.
- ஸ்பின்னர்களுக்கு சாதகமான ஆடுகளத்தில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய இலங்கை 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 240 ரன்கள் எடுத்தது.
- தொடர்ந்து 241 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா அதிரடி தொடக்கம் தந்து அரைசதம் அடித்தார்.
- எனினும் அவர் ஆட்டமிழந்த பிறகு ஜெஃப்ரி வான்டர்சேவின் சுழற்பந்துவீச்சில் இந்திய வீரர்கள் விக்கெட்டுகளை இழந்தனர்.
- 43வது ஓவரில் இந்திய அணி 208 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆக, 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இலங்கை, 3 போட்டிகள் கொண்ட தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
Next Story