``விரைவில்..'' தவெகவில் இருந்தா..? திருமாவுக்கு ஜெர்க் கொடுத்த ஆதவ் வீடியோ

x

எளிய மக்கள் அதிகாரத்தை அடைவதற்கான பிரச்சாரத்தை மக்கள் சக்தியுடன் விரைவில் உருவாக்குவோம் என, வி.சி.க.வில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.

விசிக துணை பொதுச் செயலாளராக பதவி வகித்த ஆதவ் அர்ஜுனாவை, கட்சியில் இருந்து ஆறு மாத காலம் இடைநீக்கம் செய்து, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அறிவித்தார். இந்நிலையில், எக்ஸ் தளத்தில் ஆதவ் அர்ஜுனா வெளியிட்டுள்ள பதிவில், ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்ற முழக்கத்துடன், எளிய மக்கள் அதிகாரத்தை அடைவதற்கான பிரச்சாரத்தை, மக்கள் சக்தியுடன் விரைவில் உருவாக்குவோம் என்று பதிவிட்டுள்ளார். மக்கள் சக்தியை விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து சந்திப்பாரா? அல்லது விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இருந்து சந்திப்பாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Next Story

மேலும் செய்திகள்