தவெகவிற்கு தாவுகிறாரா ஆ`தவ்'..? பாதியில் வெளியேறிய புஸ்ஸி ஆனந்த் - எகிறும் அரசியல் சூடு
செங்கல்பட்டு அருகே தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்ற தவெக பொதுச்செயலாளர் ஆனந்த், செய்தியாளர் சந்திப்பை தவிர்த்து பாதியில் வெளியேறினார். தவெக தலைவர் விஜய் பங்கேற்ற அம்பேத்கர் புத்தக விழாவில், ஆதவ் அர்ஜுனாவின் பேச்சு அரசியலில் புயலை கிளப்பிய நிலையில், அவர் விசிகவில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். இதுகுறித்து தவெக தலைமை இதுவரை கருத்து தெரிவிக்காத நிலையில், காட்டாங்குளத்தூர் பகுதியில் கடை திறப்பு விழாவிற்கு வந்த ஆனந்த் செய்தியாளர்களை சந்திப்பார் என நிர்வாகிகள் தெரிவித்திருந்தனர். எனினும், மேடைக்கு சென்று பேட்டி தருவதாக கூறிய ஆனந்த், பேட்டியை தவிர்த்து பாதியிலேயே வெளியேறினார்.
Next Story