உ.பி. முதல் தமிழகம் வரை..12 மத்திய அமைச்சர்கள் படுதோல்வி - ஆட்டம் கண்ட பாஜக கூடாரம்

x

பல மாநிலங்களில் வேட்பாளராக களமிறங்கிய மத்திய அமைச்சர்கள் தோல்வி அடைந்திருப்பது பா.ஜ.க.வுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ள நிலையில், அந்த பட்டியலை தற்போது பார்க்கலாம்.மத்தியில் அடுத்து ஆட்சி அமைக்க போவது யார் ? என்பதை தீர்மானிக்கும் மாநிலமாக கருதப்படும் உத்தர பிரதேசத்தில் பாஜக சார்பில் 10 மத்திய அமைச்சர்கள் களமிறக்கிய நிலையில், 6 அமைச்சர்கள் தோல்வி சந்தித்துள்ளனர்.அமேதி தொகுதியில் மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் ஸ்மிருதி இரானி, எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் கே.எல்.சர்மாவிடம் தோல்வி அடைந்தார்.கெரி தொகுதியில் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் குமார் தோல்வியடைந்தார்.மோகன்லால்கஞ்ச் தொகுதியில் மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களுக்கான இணை அமைச்சர் கவுஷல் கிஷோர், சமாஜ்வாதி கட்சியிடம் தோல்வியை தழுவினார்.சண்டெளலி தொகுதியில் மத்திய கனரக தொழில்துறை அமைச்சராக மகேந்திர நாத் பாண்டே சமாஜ்வாதி கட்சி வேட்பாளரிடம் தோல்வியடைந்தார்.ஃபதேப்பூர் தொகுதியில் மத்திய ஊரக வளர்ச்சித்துறை இணை அமைச்சர் நிரஞ்சன் ஜோதி தோல்வியை சந்தித்தார்முசாபர்நகர் தொகுதியில் கால்நடை பராமரிப்பு, மீன்வளம் மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் சஞ்சீவ் குமார் பல்யாண், சமாஜ்வாதி கட்சியிடம் தோல்வி அடைந்தார்.ஜலான் தொகுதியில் குறு, சிறு மற்றும் நடுத்தர அமைச்சகத்தின் இணை அமைச்சரான பானு பிரதாப் சிங் வர்மா, சமாஜ்வாதியிடம் தோல்வியை தழுவினார்.ராஜஸ்தானில் களமிறக்கப்பட்ட நான்கு மத்திய அமைச்சர்களில் ஒருவர் தோல்வியை தழுவினார்.அங்குள்ள பார்மர் தொகுதியில் மத்திய வேளாண்மை மற்றும் உழவர்கள் நலத்துறை அமைச்சர் கைலாஷ் செளத்ரி மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.மேற்கு வங்கத்தில் களமிறங்கிய மூன்று மத்திய அமைச்சர்களில் இருவர் தோல்வியை சந்தித்துள்ளனர். பாங்குரா தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளரான மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் சுபாஸ் சர்க்கார் தோல்வி அடைந்தார்.கூச் பெஹார் தொகுதியில் மத்திய உள்துறை இணையமைச்சரான பா.ஜ.க.வின் நிசித் பிரமாணிக் பா.ஜ.க.விடம் தோல்வியை தழுவினார்.இதே போல், ஜார்க்கண்டின் குந்தி தொகுதியில் போட்டியிட்ட பழங்குடியினர் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சரான அர்ஜூன் முண்டா தோல்வியைத் தழுவியுள்ளார்.கேரளாவின் திருவனந்தபுரத்தில் மத்திய திறன் மேம்பாடு, மற்றும் ஜல்சக்தி துறை இணை அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் காங்கிரஸ் வேட்பாளர் சசி தரூரிடம் தோல்வியடைந்தார்.இதே போல், தமிழகத்தின் நீலகிரி தொகுதியில் போட்டியிட்ட தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் இணை அமைச்சர் எல்.முருகன் தோல்வியை தழுவியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்