`நீட் முறைகேடு விவகாரம்' - காங்கிரஸ் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு
`நீட் முறைகேடு விவகாரம்' - காங்கிரஸ் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு
அண்மையில் நடைபெற்ற நீட் நுழைவுத் தேர்வுகளில் ஏராளமான முறைகேடுகள் நடைபெற்று இருப்பதாகவும் வினாத்தாள் முன் கூட்டியே கசிந்ததாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன... மேலும் சிலருக்கு கருணை அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் கருணை மதிப்பெண்களை ரத்து செய்துவிட்டு மறு தேர்வு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில் நீட் தேர்வில் முறைகேடுகள் மற்றும் ஊழல் நடைபெற்றுள்ளதாகக் கூறி வரும் 21ஆம் தேதி நாடு முழுவதும் மாநில தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே சி வேணுகோபால் கடிதம் எழுதியுள்ளார்... மாணவர்களுக்கு நீதி கேட்டு நடைபெறும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் உள்ளிட்டோரும் பங்கு பெற வேண்டும் எனவும் போராட்ட நடவடிக்கைகள் தொடர்பான விரிவான அறிக்கையை கட்சியின் தலைமைக்கு அனுப்ப வேண்டும் எனவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.