`அறுசுவை விருந்து, தங்க மோதிரம்' - விஜய் செய்த நன்றிக்கடன்-மகிழ்ச்சியில் வாய் அடைத்து நின்ற மக்கள்
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு கடந்த அக்டோபர் மாதம் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் வி.சாலையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் கிட்டத்தட்ட 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதாக தகவல்கள் வெளியாகின. இந்த மாநாட்டில் த.வெ.க. தலைவர் விஜய் தனது கட்சியின் கொள்கைகளை அறிவித்தார். இந்த மாநாட்டிற்கு வி.சாலை பகுதியில் 170 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு, மாநாடு பிரமாண்டமாக நடைபெற்றது. அதில் பல்வேறு நில உரிமையாளர்களின் விவசாய நிலங்களும் அடங்கும். அதனை மாநாட்டிற்கு பயன்படுத்திவிட்டு மீண்டும் விவசாய பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் ஏற்பாடு செய்து கொடுப்பதாக ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்த நிலையில், த.வெ.க. கட்சியின் முதல் மாநாட்டிற்கு நிலம் வழங்கிய நில உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு விஜய் பனையூரில் உள்ள த.வெ.க. கட்சி அலுவலகத்தில் விருந்து வழங்கினார். மாநாட்டை சிறப்பாக ஏற்பாடு செய்த மாவட்ட தலைவர் பரணி பாலாஜி, பந்தல் அமைப்பாளர் விஸ்வநாதனுக்கு விஜய் தங்க மோதிரம் வழங்கினார். விஜய்யை நேரில் பார்த்தது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்த விவசாயிகள், தங்களிடம் அவர் ஒரு வார்த்தை கூட அரசியல் பேசவில்லை என நெகிழ்ந்தனர்...