"ஈ.பி.எஸ் உடன் கருத்து வேறுபாடு இல்லை" - இணையத்தில் தீயாய் பரவும் அமைச்சரின் பதிவு
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற கட்சி கள ஆய்வுக் கூட்டத்திற்கு பிறகு, தனது மகனின் திருமண அழைப்பிதழை, முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு வழங்கியதாகவும், அதன்பிறகு தனது குடும்ப நண்பர் நயினார் நாகேந்திரனை நேரில் சந்தித்து தனது மகன் திருமண அழைப்பிதழை வழங்கியதாகவும், அப்பொழுது, முன்னாள், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்ததாகவும் தெரிவித்துள்ளார். சொந்த குடும்ப நிகழ்ச்சிக்காக, குடும்ப நண்பரை சந்தித்த நிகழ்வை, அரசியல் சாயம் பூசி, நாளிதழ் செய்தி வெளியிட்டது வருத்தமளிப்பதாக எஸ்.பி.வேலுமணி குறிப்பிட்டுள்ளார். எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் எடப்பாடி பழனிசாமி, கட்சியை சிறப்பாக வழிநடத்தி வருவதாகவும், அவருடன் தனக்கு எந்தவித கருத்து வேறுபாடும் கிடையாது என்றும் தெரிவித்துள்ளார்.