இளைஞர்களுக்கு தற்காப்பு கலையை கற்றுக் கொடுத்த வீடியோவை வெளியிட்ட ராகுல் காந்தி

x

தேசிய விளையாட்டு தினமான இன்று இளைஞர்களுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார். யாத்திரையில் ஆரோக்கியமாக இருப்பதற்காக தொடங்கிய எளிமையான பயிற்சி, சக யாத்திரிகர்களையும், இளம் தற்காப்பு கலை மாணவர்களையும் ஒன்றிணைத்து, சமூக நடவடிக்கையாக விரைவாக உருவானது என நெகிழ்ந்துள்ளார். தியானம், ஜியு-ஜிட்சு, ஐகிடோ மற்றும் வன்முறையற்ற மோதலை தீர்க்கும் நுட்பங்களின் கலவையான Gentle Art-ன் அழகை இளைஞர்கள் மனதிற்கு கொண்டு செல்வதே எங்கள் குறிக்கோளாக இருந்தது என தெரிவித்துள்ளார். வன்முறையை மென்மையாக மாற்றுவதன் மதிப்பை அவர்கள் மனதில் விதைப்பதை நோக்கமாக கொண்டிருந்தோம் எனவும் இரக்கமுள்ள மற்றும் பாதுகாப்பான சமூகத்தை உருவாக்குவதற்கான கருவிகளை அவர்களுக்கு வழங்கியதாகவும் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்