சென்னையில் பிரதமர் கால் வைக்கும் முன்பே...பரபரப்பை கிளப்பிய புகார்
பிரதமர் மோடியின் சாலை மார்க்க வாகன பேரணிக்கான அனுமதியை ரத்து செய்ய வேண்டுமென, காங்கிரஸ் கட்சியினர் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதசாகுவிடம் மனு அளித்துள்ளனர். பிரதமர் மோடி இன்று தமிழ்நாடு வர உள்ளார். சென்னை தியாகராய நகர் பாண்டி பஜார் பகுதியில் வாகனத்தில் இருந்தவாரே பரப்புரையில் ஈடுபட உள்ளார். இந்த நிலையில், பொய்யான தகவலை கூறி பாஜகவினர் அனுமதி பெற்றுள்ளதால், அனுமதியை ரத்து செய்யக்கோரி, தலைமை செயலகத்தில் சாகுவை சந்தித்து, காங்கிரஸ் கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.
Next Story