"அதற்கு காரணமே ஈபிஎஸ் தான்" - ஒரே போடாக போட்ட அமைச்சர் கே.என்.நேரு | KN Nehru | EPS | Thanthi TV
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒன்றிய அரசின்15வது நிதி ஆணையம் 2022-2023 ஆம் ஆண்டு முதல்மாநிலத்தின் மொத்த உள்நாட்டு வளர்ச்சிக்கு ஏற்றவாறு, “ஆண்டுதோறும் சொத்துவரி வீதத்தை உயர்த்திட வேண்டும் என நிபந்தனைகளை விதித்துள்ளதாக கூறியுள்ளார். அதேபோல 'தூய்மை இந்தியா திட்டம்' மற்றும் அம்ரூட் 2.0 ஆகியவற்றுக்கும் இதே நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். ஒருவேளை தமிழ்நாடு அரசு இதை கடைபிடிக்காத பட்சத்தில், உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2021-26 வரை, நமக்கு கொடுக்கப்பட வேண்டிய ஒன்றிய அரசின் மானியம், 4 ல்டத்து 36 ஆயிரத்து 361 கோடி நிறுத்தி வைக்கப்படும், அதோடு தூய்மை இந்தியா திட்டம் , அமரூட் 2.0 திட்டம் ஆகியவற்றிற்கான நிதியும் ஒதுக்கப்படாது என்று கூறியுள்ளதாக தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசு இப்படி கடுமையான விதிகளை 15வது நிதியாணையத்தின் மூலம் விதித்தபோது, அவர்களோடு நட்புறவில் இருந்தவர் தான் எடப்பாடி பழனிச்சாமி என்று கூறியுள்ள அமைச்சர் கே.என்.நேரு, தற்போது தமிழ்நாடு அரசு தான் சொத்து வரி உயர்வுக்கு காரணம் என்று சொல்வது, முழு பூசனிக்காயை சோற்றில் மறைப்பது போல் உள்ளது என, விமர்சித்துள்ளார்.