நாட்டையே பரபரப்பாக்கிய கேஸ் - ஈபிஎஸ்-ம் விசாரிக்கப்படுவார்?" - புது தகவல்

x

கொடநாடு கொலை கொள்ளை வழக்கு உதகையில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணைக்காக குற்றம் சாட்டப்பட்ட ஒரு தரப்பில் சயான் மற்றும் வாளையார் மனோஜ் ஆகியோர் மட்டுமே ஆஜராகினர். விசாரணையின் போது குற்றம் சாட்டப்பட்டோர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயன் கொலை கொள்ளை நடைபெற்ற கொடநாடு பங்களாவை ஆய்வு செய்ய அனுமதிக்குமாறு ஏற்கனவே மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், ஆனால் இதுவரை அனுமதி வழங்கப்படாமல் இருப்பதாகவும் தெரிவித்தார். அப்போது குற்றம் சாட்டப்பட்டோர் தரப்பினர் சம்பவம் நடைபெற்ற கொடநாடு பகுதியில் ஆய்வு செய்ய அனுமதிக்க முடியாது என அரசு தரப்பு வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனை அடுத்து வழக்கு விசாரணையை டிசம்பர் 20ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்