X தளத்தில் பரபரப்பு பதிவு - கண்சிவந்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை | Annamalai | BJP | Thanthi TV
தமிழகத்தில் ரயில்வே திட்டங்கள் தாமதத்திற்கு ஆளும் திமுக அரசுதான் காரணம் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். தமிழகத்தில் நிலம் கையகப்படுத்துவதில் ஏற்படும் தாமதத்தால், ஐந்து முக்கிய ரயில் திட்டங்கள் தாமதமாகி வருவதாக மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இதனைக் குறிப்பிட்டு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ரயில்வே திட்டங்களை நிறைவேற்றத் தேவையான நிலங்களைக் கையகப்படுத்தும் பணிகளை, திமுக அரசு விரைந்து முடிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
Next Story