"ஜூன் 4ல் ஏன்..? உடனே ரத்து செய்யுங்கள்.." - ஈபிஎஸ் அதிரடி | EPS

x

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், நீட் தேர்விற்கான மதிப்பெண் வழங்கும் முறையில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியான நிலையில்,

நீட் தேர்வு நடத்திய தேசிய தேர்வு முகமையின் விளக்கமும் வெளிப்படைத்தன்மை கொண்டதாக இல்லை என ஈபிஎஸ் குற்றம் சாட்டியுள்ளார். வட மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்குவது முதல் வினாத்தாள் வழங்குதல் வரை பல்வேறு நிலைகளில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு வந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார். இதற்கிடையே, ஜூன் 14ம் தேதி வருவதாக அறிவிக்கப்பட்ட நீட் தேர்வு முடிவுகள், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி அவசர அவசரமாக தேர்தல் முடிவு வெளியாகும் நாளன்று வெளியானதில் கூட மாணவர்களுக்கும் பொது மக்களுக்கும் சந்தேகத்தை எழுப்பியுள்ளதாகக் குறிப்பிட்ட ஈபிஎஸ்,

இந்த ஆண்டு நீட் தேர்வில் நடைபெற்ற குளறுபடி குறித்து வெளிப்படையான விளக்கம் அளிக்கவும், மாணவர்களின் மருத்துவக் கனவை பாதிக்கும் நீட் தேர்வை ரத்து செய்து, பழையபடி 12ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவ சேர்க்கை நடத்த ஆவண செய்யவும் புதிதாக அமையவுள்ள மத்திய அரசை வலியுறுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்