#Breaking|| ஓபிஎஸ்-க்கு மீண்டும் அதிமுக அடையாளமா? - வரபோகும் அதிமுக்கிய தீர்ப்பு
அதிமுக பெயர், கொடி, சின்னம் பயன்படுத்த விதித்த தடையை எதிர்த்த பன்னீர்செல்வம் தரப்பு மேல் முறையீட்டு மனு
தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்த்து சென்னை உயர் நீதிமன்றம்
கட்சியில் இருந்து நீக்கியதற்கு தடை விதிக்க மறுத்து ஏற்கனவே இரண்டு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவை அடிப்படையாக கொண்டு புதிய வழக்கில் தனி நீதிபதி இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது- ஓ.பி.எஸ். தரப்பு
இடைக்கால உத்தரவின் அடிப்படையில் தடை விதிக்க முடியாது என்பதால் கொடி, சின்னம் பயன்படுத்த விதித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் - ஓ.பி.எஸ். தரப்பு
தனது ஆதரவாளர்களாக உள்ள லட்சக்கணக்கான தொண்டர்கள் நீக்கப்படாத நிலையில அவர்களுக்கு எப்படி தடை விதிக்க முடியும் என ஓ.பி.எஸ். தரப்பு கேள்வி
எந்த காரணமும் குறிப்பிடாமல் கொடி, சின்னம் பயன்படுத்த விதித்த தடை செல்லத்தக்கதல்ல; தடை கோரிய வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல - ஓ.பி.எஸ்.
கட்சியில் உறுப்பினராக இல்லாத போது எப்படி கொடி, சின்னத்தை பயன்படுத்த முடியும் - இ.பி.எஸ். தரப்பு
ஓ.பி.எஸ்.க்கு லட்சக்கணக்கான ஆதரவாளர்கள் இல்லை. இருப்பதாக கூறினாலும் முகம் தெரியாத அவர்களை கருத்தில் கொள்ள வேண்டியதில்லை. யாரையும் அவர்கள் கட்சியில் இருந்து நீக்கி அறிவிக்கவில்லை - இ.பி.எஸ்.
கொடி,சின்னம் பயன்படுத்த விதித்த தடையை நீக்க கோரியிருக்கலாம்; ஓ.பி.எஸ். மேல் முறையீடு விசாரணைக்கு உகந்ததல்ல - இ.பி.எஸ். தரப்பு