பக்தர்கள் வயிற்றில் புளியை கரைத்த திருப்பதி லட்டு விவகாரம் - வெளியான புதிய தகவல்

x

திருப்பதி லட்டு தயாரிக்க வழங்கப்பட்ட நெய்யில் விலங்கு கொழுப்பு இருப்பதாக குஜராத்தை சேர்ந்த ஆய்வு நிறுவனம் ஆய்வு முடிவு ஒன்றை வெளியிட்டது. இது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனிடையே, திருப்பதி தேவஸ்தானத்திற்கு திண்டுக்கல்லை சேர்ந்த ஏ.ஆர் டெய்ரி ஃபுட் லிமிடெட் என்ற நிறுவனம் நெய் அனுப்பியது தெரியவந்தது. இந்த நிறுவனத்தில், ஏற்கனவே கடந்த செப்டம்பர் மாதம் ஆய்வு நடத்தி மாதிரிகள் எடுத்துச் செல்லப்பட்டிருந்த‌து. இந்நிலையில், இந்த நிறுவனத்தில் ஆந்திர காவல்துறையினர், 3 கார்களில் வந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். திருப்பதி தேவஸ்தானத்திற்கு அனுப்ப‌ப்பட்ட நெய்யின் விவரங்கள், நெய்யில் கலந்துள்ள பொருட்கள் குறித்து அவர்கள் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்