மக்களவையில் ரயில்வே சட்டதிருத்த மசோதா நிறைவேறியது

x

1989 ரயில்வே சட்டத்தில் சில திருத்தங்களை மேற்கொள்ளும் வகையிலான மசோதாவை மக்களவையில் மத்திய அரசு கடந்த வாரம் தாக்கல் செய்தது. எதிர்க்கட்சிகள் அமளியால் மசோதா மீதான விவாதம் நடைபெறாமல் இருந்த நிலையில் இன்று விவாதம் நடைபெற்றது. அப்போது திருத்தங்கள் ரயில்வேயை தனியார் மயமாக்க உதவும் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு பதிலளித்த ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், ரயில்வேவை பாதுகாப்பானதாக மாற்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம் என்றார். தொடர்ச்சியாக ரயில்வே சட்ட திருத்த மசோதா மக்களவையில் நிறைவேறியது.


Next Story

மேலும் செய்திகள்